#என்_தலைவர்_என்_பெருமை

பெருந்தலைவர் முதலமைச்சராக இருந்தகாலம்..திருநெல்வேலியில் சுற்றுபயணம் மேற்கொள்ள திட்டம் தயாரிக்கப்பட்டது..

அப்பொழுது திருநெல்வேலியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்,தான் புதிதாக ஒரு திரையரங்கம் கட்டியுள்ளதாகவும் , அதனை காமராஜர் திறந்துவைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார்..

பெருந்தலைவரும் சம்மதிக்கிறார்..

திறப்பு விழாவிற்கு தடபுடலாக ஏற்பாடு செய்யபட்டிருந்தது..பெருந்தலைவரும் காரில் வந்து இறங்குகிறார்..

திரையரங்கு உரிமையாளரும்..மற்ற தலைவர்களும் ஓடிவந்து ” அய்யா.மாவட்ட கலைக்டர்.சம்பத் .காலையில் வந்து பிரச்சினை பண்ணுகிறார்.ஒயரிங் சரியாக பண்ணவில்லை என்று சொல்லி தியேட்டருக்கு லைசன்ஸ் தர மறுக்கிறார் ” என்று ஆவேசமாக பெருந்தலைவரிடம் புகார் தெரிவிக்கின்றனர்..

பெருந்தலைவர் ” அப்படியா..அந்த கலைக்டரை வரசொல்லுங்கள் ” என்கிறார்..

கலைக்டரும் வந்து ”அய்யா..வணக்கம் ” என்கிறார்.

கலைக்டரை பார்த்து ” இந்த தியேட்டர் யாருடையது என்று தெரியுமான்னேன்…? .”என்று கேட்கிறார் பெருந்தலைவர்..

”தெரியும் அய்யா..எம்.எல்.ஏக்கு சொந்தமானது ”என்கிறார் மாவட்ட ஆட்சியர்.

இந்த எம்.எல்.ஏ எங்க ஆளும் கட்சியை சேர்ந்தவர்ன்னு தெரியுமான்னேன் …”

‘தெரியும் அய்யா ”’

”இந்த தியேட்டரை திறக்க நான் வருகிறேன் என்று
தெரியும்மான்னேன்..? ”

” தெரியும் அய்யா..”

இவ்வளவு தெரிஞ்சுமா லைசன்ஸ் கொடுக்கமாட்டேன் என்கிறீர்கள்…?”

மன்னிக்கவும் அய்யா..நான் விதிமுறையை பின்பற்றி என் கடமையைத்தான் செய்தேன்..சரியாக ஓயரிங் செய்யாமல் அதனால் மின் கசிவு ஏற்பட்டு பெரிய விபத்து ஏற்பட்டால் ..அதற்கு நான்தான் பதில் சொல்ல வேண்டும்.” என்கிறார் மாவட்ட ஆட்சியர்..

உடனே பெருந்தைவர் காமராஜர் அவர் கையை பிடித்து குலுக்கி ” உங்களை மாதிரி அதிகாரிகள்தான் இந்த நாட்டுக்கு தேவைன்னேன்..சபாஷ் ” என்று சொல்லிவிட்டு

எம்.எல்.ஏவை பார்த்து..”இப்பொழுது நான் வந்ததற்கு தியேட்டரை திறந்து வைக்கிறேன்..ஆனால் படத்தை ஓட்டகூடாது..அதிகாரி சொன்னபடி எல்லாவற்றையும்சரிசெய்துவிட்டு லைசன்ஸ் வாங்கிட்டுதான் படத்தை ஓட்டனும்..” என்று சொல்லிவிட்டு செல்கிறார்..

#ஜூலை_15_கொண்டாட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here