தமிழகம் ஈன்றெடுத்த சுதந்திர போராட்ட தளபதி சுப்பிரமணிய சிவா

தமிழகம் ஈன்றெடுத்த சுதந்திர போராட்ட தளபதி சுப்பிரமணிய சிவா

தமிழகம் ஈன்றெடுத்த சுதந்திர போராட்ட தளபதி சுப்பிரமணிய சிவா
தமிழகம் ஈன்றெடுத்த சுதந்திர போராட்ட தளபதி சுப்பிரமணிய சிவா

இன்று தமிழகம் ஈன்றெடுத்த சுதந்திர போராட்ட தளபதி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு தினம் ..

சென்னை மாகாணத்தில் முதன் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தியாகி..

பதினாறு வயதில் சுதந்திரபோராட்டதில் ஈடுபடத்தொடங்கி நாற்பது வயதில் சுதந்திரக்கனவு நிறைவேறாமலேயே மரணித்து போனவர்…

அப்பொழுது எல்லாம் சாதாரண சிறைவாசம் என்பதே கொடுமையானது..ஆனால் சுப்பிரமணிய சிவா அவர்களுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது..

அப்பொழுது மாட்டிற்கு பதிலாக இவரே செக்கிழுக்க வேண்டும்..எல்லோரது மலத்தையும் இவரே அள்ளவேண்டும்..

வெள்ளைய சிறைக்காவலர் இவரிடம் வந்து மற்ற கைதிகளின் மலத்தை அள்ள வேண்டும் என்று சொன்னபோது..”எனது சக இந்தியனுக்கு தொண்டு செய்யும் பாக்கியம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி..அதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன் என்றாராம் .

தனது வாழ்வில் பெரும்பகுதியை சிறையில் கழிப்பதும்…வெளியில் வந்தவுடன்
சுதந்திரம் சுதந்திரம் என்று ஊரெல்லாம் சுற்றி பிரச்சாரம் செய்வதுமாக இருந்தபோது..

இவரது மனைவி வறுமையின் காரணமாக கவனிப்பாரின்றி இறந்துபோன தகவல் இவருக்கு தெரிவிக்கபட்டது…… அந்த வேதனையிலும்
சிவா அவர்கள் ..

நான் இன்னும் வேகமாக சுதந்திர போரில் ஈடுபட வேண்டும் என்பதற்காக அவள் என்னிடமிருந்து சுதந்திரம் பெற்று சென்றுவிட்டாள் ..என்று சொன்னாராம்.

எந்த வசதியும் இல்லாத சிறை கொட்டடியில் அடைக்க பட்டதாலும் சித்திரவதையாலும் சுப்பிரமணிய சிவா அவர்களுக்கு தொழுநோய் தொற்றி கொண்டது..

அதன் காரணமாக அவருக்கு பஸ்ஸிலோ ரயிலிலோ பயணிக்க அனுமதி மறுக்க பட்டது..

கொடுமையான நோயிலும் கடைசிவரை சுதந்திரத்திற்காகவே உழைத்து நாற்பது வயதிலேயே மரணத்தை தழுவினார்..

நமது தமிழர்களின் சுதந்திர போராட்ட வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டுவிட்டது.அதனை வெளிகொணர்ந்து இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்வோம் என வேண்டுகிறேன்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here