
பெருந்தலைவருக்கு பிறகு காங்கிரஸ் காரர்களால் அதிகம் உச்சரிக்க பட்ட பெயர்
பெருந்தலைவருக்கு பிறகு மக்களை காங்கிரஸ் கட்சியின்பால் திரும்பி பார்க்க வைத்த தலைமைப்பண்பு..
காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் முடிவுரை எழுதப்பட்டுவிட்டதாக கொக்கரிக்கபட்ட நிலையில்
1977 ஆம் ஆண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அலை வீசிய காலகட்டதிலேயும்..காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டிருந்த நிலையிலும்…தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தனித்து நிற்க வைத்து..தனி ஒரு தலைவனாக போராடி 27 சட்டமன்ற உறுப்பினர்களையும் 20.4 சதவிகித வாக்குகளையும் பெற்றுத்தந்து காங்கிரஸ் காரனை தலை நிமிர்ந்து நடக்க வைத்தவர்..[ பெருந்தலைவர் காலத்திலேயே 15 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் ]
அதன்பிறகு மீண்டும் 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை தனித்து நிற்கவைத்து 26 சட்டமன்ற தொகுதிகளையும் 21.5 சதவிகித வாக்குகளையும் பெற்று தந்து..சொந்த கால் இல்லாத கட்சி..பிறர் முதுகில் சவாரி செய்யும் கட்சி காங்கிரஸ் என்ற அவப்பெயரை துடைதெரிந்தவர்.
பெருந்தலைவரைபோன்றே இக்கட்டான நேரத்திலும் தலைமைக்கு துணையாய் இருந்தவர்.தன்மானத்தை விட்டு கொடுக்காதவர்.
கட்சி அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதித்திருந்தால் காமராஜர் ஆட்சி என்ற காங்கிரஸ் காரர்களின் கனவு தமிழகத்தில் என்றோ நிறைவேறியிருக்கும்..
முப்பது சதவிகித வாக்குகளை பெற்று இரண்டு திராவிட கட்சிகளும் பலமுறை ஆட்சியை கைப்பற்றியிருக்கும்போது..27சதவிகித வாக்குகளை பெரும் வல்லமை படைத்த அய்யா மூபனாரால் ஒரு மூன்று சதவிகித வாக்குகளை அதிகரிக்க முடிந்திருக்காதா என்ன..?
பிரதமர் பதவியை அலங்கரித்திருக்க வேண்டிய தமிழ் மகன் அய்யா மூப்பனார்