182 ஆண்டு பழைமையான திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் 8தூண்களும் 9மதகுகளும் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

182 ஆண்டு பழைமையான திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் 8தூண்களும் 9மதகுகளும் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
182 ஆண்டு பழைமையான திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் 8தூண்களும் 9மதகுகளும் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

திருச்சி முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த 182ஆண்டு பழைமையான மேலணையின் 8தூண்களும் 9மதகுகளும் உடைந்து இடிந்துவிழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
திருச்சி முக்கொம்பில் காவிரி ஆறு காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரியும் இடத்தில் 1836ஆம் ஆண்டு ஆர்தர் காட்டன் என்கிற ஆங்கிலேயப் பொறியாளரால் அணை கட்டபட்டது. 634மீட்டர் நீளமுள்ள இந்த அணை 45 மதகுகள் கொண்டதாகும். இந்த அணையில் கொள்ளிடம் பாலத்தின் கீழுள்ள மதகுகளில் நொடிக்கு 3 லட்சம் கனஅடி தண்ணீர் செல்ல முடியும். அதே போல் காவிரியாற்றிலும் நொடிக்கு இரண்டு லட்சம் கனஅடி தண்ணீர் செல்ல முடியும். கொள்ளிடம் ஆற்றில் இருந்து பிரியும் மூன்று கிளை வாய்க்கால்கள் உள்ளன.
ஜூலை 19ஆம் நாள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதில் இருந்தே முக்கொம்பில் காவிரியாற்றிலும் கொள்ளிடத்திலும் அதிக அளவில் தண்ணீர் சென்றுகொண்டிருந்தது. கர்நாடகத்தில் மிகப் பலத்த மழை பெய்து நொடிக்கு இரண்டு இலட்சம் கனஅடிக்கு மேல் தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டது. இதே அளவு நீர் மேட்டூர் அணையில் இருந்தும் திறக்கப்பட்டது. பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டதால் கடந்த ஒருவாரமாக முக்கொம்புக்கு நீர்வரத்து நொடிக்கு இரண்டு இலட்சம் கனஅடிக்கு மேல் இருந்தது. இந்த நீரில் பெருமளவு முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாகத் திறந்துவிடப்பட்டது. அதிக அளவாக நொடிக்கு ஒரு லட்சத்து 67ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

திருச்சியை அடுத்த முக்கொம்பில் உள்ள அணையில் இருந்து தண்ணீர் காவிரி, கொள்ளிடம் மற்றும் கால்வாய்களில் பிரித்து அனுப்பப்படுகிறது. இதில் கொள்ளிடத்தில் தண்ணீரை திறந்து விடும் மதகுகளில் 7 மதகுகள் உடைந்துள்ளன.
அந்த அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீத த்தையும் கடந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பை குறைத்த போது அதில் 7 மதகுகள் உடைந்துள்ளது தெரியவந்தது. இதனால் இப்போது கொள்ளிடத்தில் கூடுதல் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. கொள்ளிடத்தில் தொடர்ந்து தண்ணீர் பாய்வதை அடுத்து, அந்த ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here