‘தம்பி, வண்டியை எடுங்க போலாம்’ – ஏரிக்குள் டூவிலரில் சென்று ஆய்வு செய்து அசத்திய ஜி.கே.வாசன்

'தம்பி, வண்டியை எடுங்க போலாம்' - ஏரிக்குள் டூவிலரில் சென்று ஆய்வு செய்து அசத்திய ஜி.கே.வாசன்

Kgvasan

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே வாசன் இருச்சக்கர வாகனத்தில் அமர்ந்து மிகப்பெரிய ஏரிக்குள் நீண்டநேரம் பார்வையிட்டார். இவரை பின்னால் உட்கார வைத்து இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். ரங்கராஜன் பதற்றத்துடன் வண்டியை ஓட்டிச் சென்றார்.

‘தம்பி, வண்டியை எடுங்க போலாம்’ – ஏரிக்குள் டூவிலரில் சென்று ஆய்வு செய்து அசத்திய ஜி.கே.வாசன்
‘தம்பி, வண்டியை எடுங்க போலாம்’ – ஏரிக்குள் டூவிலரில் சென்று ஆய்வு செய்து அசத்திய ஜி.கே.வாசன்

கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டு பல வாரங்கள் ஆன நிலையிலும்கூட தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடைமடைப் பகுதிகளான பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவசத்திரம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தண்ணீர் வந்துசேரவில்லை என இப்பகுதி விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள். இதனால் இங்குள்ள வாய்கால்கள் மற்று ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது. இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் இப்பகுதிகளை பார்வையிட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி,கே. வாசன் பட்டுக்கோட்டைக்கு காரில் வந்தார். இங்கிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செல்லிக்குறிச்சி ஏரிக்கு காரில் சென்ற ஜி,கே,வாசன் அங்கிருந்த தனது கட்சியினர் மற்றும் விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஏரியின் மொத்த பரப்பு 320 ஏக்கர். இதுல தண்ணீர் நிறைஞ்சா பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்” என அங்கிருந்தவர்கள் சொன்னதும், ஏரிக்குள் இறங்கி பார்வையிட ஜி.கே வாசன் ஆர்வமானார். ஏரிக்குள் காரில் சென்றால் மண்ணுக்குள் புதையும். கடுமையான வெயில் வாட்டியெடுத்ததால் நடந்து செல்வது சிரமம் என்பதால், என்னசெய்வதென்று தெரியாமல் கட்சியினர் குழப்பத்துடன் நின்றார்கள். ’’வண்டியை எடுங்க தம்பி போகலாம்” என இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைணடிக் ஹோண்டாவை ஓட்டுமாறு, பட்டுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ ரங்கராஜனிடம் ஜி.கே.வாசன் சொன்னதும் அவர் சற்று தயக்கத்துடன் வண்டியை ஓட்டி சென்றார். அவருடன் பின்னால் அமர்ந்து சென்ற ஜி,கே வாசன் ஏரி முழுவதும் பார்வையிட்டார். திரும்பி வந்து டூவிலரை நிறுத்திய ரங்கராஜன் ‘’30 வருசம் கழிச்சி இன்னைக்குதான் டூவிலர் ஓட்டியிருக்கேன். அதுவும் ஒரு கட்சியோட மாநிலத் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவரை உட்கார வச்சி ஓட்டுறோம். எதுவும் ஆயிடக்கூடாதுனு பயந்துக்கிட்டே ஓட்டினேன்’’ என்றார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here