169 பயிர்களுக்கு காப்புரிமை வழங்க வேண்டும் ஜி கே வாசன்

#169_பயிர்களுக்கு_காப்புரிமை_வழங்க_வேண்டும் : #ஜி_கே_வாசன்

#நெல் #ஜெயராமன் பாதுகாத்த 169 பாரம்பரிய பயிர்களுக்கு காப்புரிமை வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாரம்பரிய நெல் பயிர்களை பாதுகாத்து வந்த நெல் ஜெயராமன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “நெல் ஜெயராமன் விவசாயிகளுக்காகவே வாழ்ந்து இறந்தவர் ஆவார். அவரது மறைவு விவசாயிகளுக்கு மட்டும் அல்ல தமிழக மக்களுக்கே பேரிழிப்பாக உள்ளது. விவசாயத்தின் மீது கொண்ட பற்று காரணமாத நெல் திருவிழா நடத்தி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். விவசாய பெருகுடி மக்களுக்காக செயல்பட்ட அவருடைய நினைவாக தமிழக அரசு நல்ல அறிவிப்பு ஒன்றை அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அதாவது நெல் ஜெயராமன் பாதுகாத்து வந்த 169 பாரம்பரிய நெல் விதைகளுக்கு காப்புரிமை வழங்கி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதுதான் விவசாயிகள் விருப்பமாக இருக்கும்” என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

#tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here