தமிழக அரசின் அலட்சியத்தால் பயனற்று கிடக்கும் கிராம சேவை மையத்தை திறக்க வேண்டும் ஜி கே வாசன் வேண்டுகோள்

தமிழக அரசின் அலட்சியத்தால் பயனற்று கிடக்கும் கிராம சேவை மையத்தை திறக்க வேண்டும்.

கிராமப்புற மக்கள் பட்டா மாற்றம் செய்யவும் வரி செலுத்தவும், மானியங்களை பெறவும், வருவாய் சான்று மற்றும் அரசின் பல்வேறு சேவைகளுக்காகவும் கிராம சேவை மையங்கள் கட்டப்பட்டுள்ளன.

வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கு ஒரு கிராம சேவை மையம் என்ற ரீதியில் ஒரு மையத்துக்கு ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 12,524 ஊராட்சிகளில் கிராம சேவை மையங்கள் கட்டப்பட்டன.

இந்த கட்டிடத்தை மகளிர் சுய உதவிக்குழுவினரும் கூட்டம் நடத்துதல் உட்பட பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்படி அரசின் சேவைகள் கிராமப்புற மக்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே சிரமமின்றி, விரைவில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யும்போது அப்பகுதி மக்கள் பெரிதும் பயன்படுவார்கள்.

ஆனால் தமிழக அரசு இந்த மையங்களை இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. காரணம், கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக ரூ.1,750 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, மையங்களும் கட்டப்பட்டு முழுமையாக இன்னும் மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதற்கு தமிழக அரசின் மெத்தனப்போக்கே காரணம்.

எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் கிராம சேவை மையங்களை உடனடியாக திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

ஜி_கே_வாசன்
தலைவர்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

#E_Sevai_Mayam
#Tn_Government
#E_Service_Centre

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here