
திருப்பூர் மாநகரில் டிவிஷன் 11, 12 , 14 உள்ளடக்கிய முக்கிய ரோடுகளான வலையன் காடு முதல் சாமுண்டிபுரம் பஸ் ஸ்டாப் தாண்டி சிறு பூலுவபட்டி ரிங் ரோடு வரை மற்றும் மூகாம்பிகை காலனி சரஸ்வதிகிரி பள்ளி வீதி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தார் ரோடு மிகவும் சேதமடைந்து பல இடங்களில் குண்டும் குழியுமாக இருந்தது.
இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவது உடன் கடும் போக்குவரத்து நெருக்கடியும் இந்த பகுதிகளில் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைமை அந்த பகுதிகளில் நமது சொந்த பொறுப்பில் சேதமடைந்த இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக தற்காலிகமாக ஏற்பாடாக மண் கொட்டப்பட்டு சாலைகள் விபத்து ஏற்படாதவாறு சமன் செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்த சாலைகளை உடனடியாக நிரந்தரமாக சீரமைக்க அதிகாரிகளிடம் மனு கொடுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமையில் மண்டலத்தலைவர் பூபதி, டிவிஷன் தலைவர்கள் கார்த்திகேயன், ரத்னவேலு, மூத்த உறுப்பினர் ஆறுமுகம், டிவிசன் நிர்வாகிகள் சக்தி முருகன் பேக்கேஜிங் நடராஜ் முருகசாமி, ஆறுமுகசாமி இளைஞரணி மாவட்ட செயலாளர் சிவக்குமார், மோகன்,லஷ்மன் ரமேஷ், ஆபீஸ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த களப்பணியின்போது மாற்றுக் கட்சி நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு இச்செயலை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.