பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை வரவேற்கதக்கது – ஜி கே வாசன்

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரும் ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படும். என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேநேரம், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பிளாஸ்டிக் பொருட்களையும் பிளாஸ்டிக் குப்பைகளையும் பிளாஸ்டிக் உறைகளையும் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியில் சுமார் 8 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர் என்றும் இந்த தொழிலை நம்பி 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கைகளையும் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

அதாவது, மறுசுழற்சி செய்யப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்ற நிலையில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் – பிளாஸ்டிக் பொருட் களின் பயன்பாட்டினை படிப்படியாக குறைத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

ஜி கே வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

#Plastic_Ban
#Plastic_producers
#Tn_Government

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here