கல்லூரிகளில் அரசின் விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்

அரசு உதவி பெறும் சில கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

மேலும், கல்லூரிக் கட்டண வசூலில் முறைகேடுகள் நடைபெறுகின்றன.

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் தற்காலிக ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர்.

இது, மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அரசு உதவிபெறும் சில கல்லூரிகளில் சில பாடப் பிரிவுகளைச் சுயநிதி பாடப் பிரிவுகளாக மாற்றிவிட்டதால், அந்தப் பாடங்களைக் கற்பிப்பதற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழகத்தில் உள்ள அரசு, சுயநிதிக் கல்லூரிகள், அரசு உதவிப் பெறும் கல்லூரிகள் என எதுவாக இருந்தாலும் அரசின் கோட்பாடுகளுக்கு உள்பட்டு இயக்கப்படுகிறதா என்பதை ஆண்டு முழுவதும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

#ஜி_கே_வாசன்

தலைவர்

#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here