அனைத்து கட்சிகளும் கூட்டணியை அறிவிக்கும்போது நாங்களும் அறிவிப்போம் ஜிகேவாசன்

கிருமாம்பாக்கத்தை அடுத்துள்ள பிள்ளையார் குப்பம் மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் த.மா.கா. நிர்வாகியை அக்கட்சி தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது, அமைச்சர் கந்தசாமி, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் விக்னேஷ் மருத்துவ கண்காணிப்பாளர் நிர்மல்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

ஏம்பலம் தொகுதியில் வளர்ச்சி பணிகள் முறையாக நடந்து வருகிறது. வளர்ந்து வரும் தொகுதியாக ஏம்பலம் உள்ளது. புதுவை மாநில அரசுக்கு எனது பாரட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். கஜா புயல் சோகமான நிகழ்வு, அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, விவசாயிகளுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

புதுவையில் முதல்-அமைச்சரும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒத்த கருத்தோடு இணைந்து நிவாரண பணிகளை மேற்கொண்டனர். அதனடிப்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வுக்கான நம்பிக்கையை அளித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இது போன்ற நல்ல பணிகளை, புதுவை அரசு பல தரப்பட்ட மக்களுக்கும் தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

புதுவை மாநில மக்களின் நம்பிக்கையை பெற்று உணர்வுகளை புரிந்து கொண்டு, ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு ஏற்றவாறு தடைகளை எல்லாம் தாண்டி மக்கள் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.

மத்திய ஆளும் கட்சிக்கு எதிராக அகில இந்திய அளவில் மெகா கூட்டணி உருவாகும் சூழல் வெளிப்படையாக தெரிகிறது. இது மேலும், பலமடையும் என்பது எனது கருத்து. அதிகாரப்பூர்வமாக எல்லா கட்சிகளும் கூட்டணி அறிவிக்கும்போது, நாங்களும் அப்போது அறிவிப்போம்.

அமைச்சர் கந்தசாமி, நான் இங்கு வருவது அறிந்து மரியாதை நிமிர்த்தமாக என்னை சந்தித்தார். இதில், கட்சியும் இல்லை, அரசியலும் இல்லை. ஒரு குடும்ப நட்பு தான் வேறு ஒன்றும் இல்லை. இடைத்தேர்தல் நிலைபாடு குறித்து எல்லா கட்சிகளும் தங்களின் நிலைபாடுகளை அறிவிக்கும் போது, எங்களின் முடிவு குறித்து அறிப்போம்.
இவ்வாறு ஜி.கே. வாசன் கூறினார்.

#gkvasan #tamilmaanilacongress
#tmcfortn #tnpolitics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here