பாஜகவுக்கு எதிரான கூட்டணி மேலும் வலுவடையும் ஜிகேவாசன்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜவுக்கு எதிரான கூட்டணி மேலும் வலுவடையும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

புதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் #தமாகா_நிர்வாகியை ஜி.கே. வாசன்
திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, புதுவை சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி, ஜெயமூர்த்தி எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர், ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணி உருவாகும் சூழல் வெளிப்படையாகத் தெரிகிறது. இது மேலும் பலமடையும் என்பது எனது கருத்து. அதிகாரப்பூர்வமாக அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அறிவிக்கும்போது நாங்களும் அறிவிப்போம். அமைச்சர் கந்தசாமி என்னை சந்தித்ததில் அரசியல் இல்லை. இடைத்தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போது, எங்களின் முடிவை அறிவிப்போம்.

#tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here