
கஜாபுயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை முழுமையாக வழங்க வேண்டும் என்பதுதான் நியாயம். ஆனால், #பயிர்க்கடன், #கல்விக்கடன் வைத்திருப்போருக்கு அரசு வழங்கும் நிவாரண நிதியை அளிக்காமல் வங்கிகள் முடக்கி வைப்பது கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட குறையாமல் நிவாரண நிதி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு இன்னும் நிவாரண நிதி வழங்காமல் உள்ளது. அவர்களுக்கு முறையாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜிகேவாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics