அரியலூர் கூட்டம் சிறப்பாக ஏற்ப்பாடு செய்தமைக்காக ஐயா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அரியலூர் கூட்டம் சிறப்பாக ஏற்ப்பாடு செய்தமைக்காக ஐயா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பொதுக்கூட்ட நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கினைப்பு செய்த மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் மற்றும் இளைஞரணி நண்பர்கள், துணை அமைப்பு நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. பொதுக்கூட்டத்தை மாநாடாக மாற்றிக்காட்டிய தமிழகத்தை சார்ந்த நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கஜா புயழால் பாதிப்பு ஏற்ப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவி செய்த நிர்வாகிகளுகு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டும் பல்வேறு நிவாரண பொருட்கள் வழங்க மேற்கொள்ளபட்டுள்ளது. ஐயா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞரணி மாநில செயற்குழு கூட்டத்தில் அறிவித்த தீர்மானத்தின்படி ரத்ததானம் செய்ய ஆலோசிக்கப்பட்டது.

மாநில நிர்வாகிகள் மாவட்ட தலைவருடன் கலந்து வட்டாரம் வாரியாக சென்று கமிட்டி நிர்வாகிகளை ஊக்குவித்தல் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் கலந்து சந்தித்து பூத் கமிட்டி அமைக்க ஆலோசிக்கப்பட்டது. வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இளைஞரணி சார்பாக தெருமுனை பிரச்சாரம் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது.

தமாகா தலைவர் ஐயா அவர்கள் தேதி அறிவிப்பின்படி திருநெல்வேலியில் நடைபெற இருக்கும் இளைஞரணி மாநாட்டில் நிர்வாகிகளுடன் புதிய இளைஞர்களை அதிக அளவில் இயக்கத்தில் இணைத்து அவர்களுடன் தொண்டர்களையும் அதிக அளவில் இணைத்து திரளாக கலந்து கொள்ள பணிகள் மேற்கொள்ளபட வேண்டும் என முடிவு செய்யபட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here