பழைய கார் விற்பனை ஜிஎஸ்டி வரியை 5சதவீதமாக குறைக்க ஜி.கே.வாசன் கோரிக்கை

பழைய கார் விற்பனை ஜிஎஸ்டி வரியை 5சதவீதமாக குறைக்க கோரிக்கை
பழைய கார் விற்பனை ஜிஎஸ்டி வரியை 5சதவீதமாக குறைக்க கோரிக்கை

சென்னை பழைய கார் விற்பனையாளர்கள் சங்கத்தின் குடும்ப விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். இதில் பழைய கார் விற்பனைக்கு தற்போது நடைமுறையில் உள்ள 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிப்பை 5 சதவிதமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் கூறியதாவது

மத்திய,மாநில அரசுகள் கார் விற்பனையாளர் கோரிக்கையை பணிவோடு பரிசிலனை செய்ய வேண்டும் . பழைய கார்கள் வாங்க நாட்டில் 80 சதவீத மக்கள் விரும்புகின்றனர். மேலும் தமிழகத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாய நிலங்களில் செல்லும் உயர் மின்கோபுர திட்டத்தில் கேரளாவிற்கு ஒரு சட்டம் தமிழகத்திற்கு ஒரு சட்டம் என உள்ளது. இந்த விவகாரத்தில் மின் கேபிள்களை நிலத்திற்கு கீழ் கொண்டு செல்ல வழி செய்ய வேண்டும்.

முத்தலாக் சட்டம் மூலம் மத்திய பாஜக அரசு இஸ்லாமிய மக்களை கட்டாயப்படுத்தவோ, இந்த சட்டத்தை திணிக்கவோ நினைப்பது ஏற்புடையது கிடையாது. அவர்களதுஉணர்வுகளை புரிந்து கொண்டு பெரும்பாலோனோர் நினைக்ககூடிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தமாகவின் நிலைப்பாடு என்று ஜிகே வாசன் கூறினார்.
#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here