தற்சமயம் இடைத்தேர்தல் என்பதை விட நிவாரணம் வழங்குவது தான் முக்கியம் ஜிகே வாசன்

சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டது திருவாரூர் மாவட்டம்தான். எனவே அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நூறு சதவீதம் நிவாரணம் முழுமையாக வழங்க வேண்டும்.

தற்சமயம் இடைத்தேர்தல் என்பதை விட நிவாரணம் வழங்குவது தான் முக்கியம். அவர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய உயர்ந்த பணிகளையே அரசு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது மேலும், மத்திய தேர்தல்ஆணையம் தமிழகத்தினுடைய தேர்தல் ஆணையத்தின் மூலம் திருவாரூரிலே முறையாக தேர்தல் நடத்தக் கூடிய சூழல் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பி அதற்கான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இடைத்தேர்தல் குறித்து உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். தற்சமயம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தனித்தன்மையோடு நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரை பலப்படுத்தி கொள்வதற்கான பணியை மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. தேர்தல் நெருங்கும்போது உரிய நேரத்தில் மக்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு கூட்டணிகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும்.

ஜிகே வாசன்
தலைவர்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்
#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

#ThiruvarurByElection2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here