172வது தியாகராஜர் ஆராதனை விழா – பஞ்சரத்தின கீர்த்தனை பாடி உருகிய இசைக்கலைஞர்கள்

தியாகபிரம்மம்

172வது இசை அஞ்சலி ஆராதனை விழா இன்று நடைபெற்றது. கடந்த 21-ம் தேதி தொடங்கிய இந்த விழாவில் தினம்தோறும் பிரபலமான இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை இன்று நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் ஒன்று கூடி தியாகராஜருக்கு பஞ்சரத்தின கீர்த்தனை பாடி இசை அஞ்சலி செலுத்தினர். முன்னதாக தியாகராஜர் இல்லமான திருமஞ்சன வீதியிலிருந்து தியாகராஜர் உற்சவரை அலங்கரித்து உஞ்சவர்த்தினி பஜனை பாட்டுப் பாடி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் விழா பந்தலை அடைந்ததும் தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து சரியாக ஒன்பது மணிக்கு சுதா ரகுநாதன், மஹதி மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர் சுமார் ஒரு மணி நேரம் இசை கீர்த்தனை பாடப்பட்டது. நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த “ஜகதா நந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக… என்ற பாடல் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கொள ராகம், ஆதி தாளத்தில் அமைந்த “துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ… என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த “ஸாதிஞ்செநெ ஓ மநஸா… என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த கனகன ருசி ரா கநகவஸந நிந்நு… என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த “எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு… ஆகிய பாடல்களை பாடி இசை ஆராதனை செலுத்தினர்.

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

#திருவையாறு #தியாகபிரம்மம்

#music_festival #thiruvayar #inauguration

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here