தமிழகத்தை பொறுத்தவரை, எங்கள் வளர்ச்சி, எங்களுடைய எண்ணம் எல்லாம், காமராஜர்ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான்

தமிழகத்தை பொறுத்தவரை, எங்கள் வளர்ச்சி, எங்களுடைய எண்ணம் எல்லாம், #காமராஜர்ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான்.

அதன் அடிப்படையில், எங்கள் செயல்பாடு அமையும். தேர்தல் கூட்டணி என்பது வேறு; கட்சியின் லட்சியம் என்பது வேறு. எங்கள் கட்சி தொண்டர்கள் கருத்தை கேட்டு, #அ_தி_மு_க., கூட்டணியில் இணைந்தோம்.

இன்றைய அரசியல் நிலை, சூழ்நிலை, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, #த_மா_கா., எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல், நல்ல எண்ணங்கள் அடிப்படையில், இந்த கூட்டணியை உருவாக்கி உள்ளோம்.

லோக்சபா தேர்தலில் துவங்கி, உள்ளாட்சி தேர்தல் வரை, இக்கூட்டணி வெற்றி பெறும். தேச நலன், தேச பாதுகாப்பதில், இதுவே முதல் கூட்டணி.அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், ஒரு கட்சியாக, பா.ஜ., செயல்படுகிறது.

#மோடி ஆட்சியை பொறுத்தவரை, குறைகளை நிறையாக்க கூடியதாக, தொடர்ந்து செயல்படுகிறது. இது, ஏற்புடையதாக உள்ளது. முதல்வர், துணை முதல்வர், சாமானியர்களாக செயல்படுவதால், ஏழை மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் திட்டங்களை, தொடர்ந்து வழங்குகின்றனர். இதை, மக்கள் வரவேற்கின்றனர்.

பாஜகவை பொறுத்தவரை, குறைகளை நிறைகளாக்க முயற்சிக்கின்றனர். அந்த நம்பிக்கை அடிப்படையில், இந்த கூட்டணி.

கூட்டணி வெற்றிக்காக, 39 தொகுதிகளுக்கும் செல்ல உள்ளேன். பொதுச் செயலர் முனைவர் பாட்ஷாவும் செல்வார்.

ஜி கே வாசன்
தலைவர்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here