திமுகவின் தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க கபட நாடகம் என்று திரு.யுவராஜா கடுமையாக சாடினார்

TMC YOUTH WING YUVARAJA
TMC YOUTH WING YUVARAJA

திமுகவின் தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க கபட நாடகம் என்றும் மிகமிக பொய்யான தேர்தல் அறிக்கை என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் திரு.யுவராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு.யுவராஜா,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க கபட நாடகம். மிகமிக பொய்யான தேர்தல் அறிக்கை. குறிப்பாக சேலத்தில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும் என திமுக கூறுவது மிகுந்த நகைச்சுவை போல் உள்ளது.

தமிழகத்தில் மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற மக்களுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் அனுமதித்தவர், திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி கையொப்பமிட்டவர் திமுக தலைவர் ஸ்டாலின். தற்போது உயர்மின் கோபுர திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். திமுக ஆட்சி காலத்தில் தான் இந்த உயர்மின் கோபுர திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டது.

ஆனால், திமுகவின் தேர்தல் அறிக்கையில் மீத்தேன் திட்டம், உயர்கோபுர மின் அழுத்த திட்டம் இவைகளெல்லாம் தடுத்து நிறுத்தப்படும் என பொய்யான தேர்தல் அறிக்கையை வாக்குறுதியாக திமுக வாரி இறைத்து உள்ளது. மேலும், 2006 முதல் 2011 ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தான் நில அபகரிப்பு வழக்கில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன. தமிழகத்தில் கலைத்துறை, கல்வித்துறை, பத்திரிக்கை துறை இவை அனைத்தும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. திமுகவின் ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் கமிஷன், கரப்ஷன் தொடங்கியது. திமுகவில் தான், அனைத்து மாவட்ட செயலாளர்களும் தற்போது மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆக உள்ளனர். ஆகவே கமிஷனுக்கு பெயர்போன கட்சி திமுக தான்” என்று திரு.யுவராஜா கடுமையாக சாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here