தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காததற்கு திமுக – காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம் – ஜி.கே.வாசன்

தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காததற்கு திமுக – காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம் என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சை மக்களவை தொகுதியில் தமாகா வேட்பாளர் நடராஜன், இடைத்தேர்தல் வேட்பாளர் ஆர்.காந்தி ஆகியோரை ஆதரித்து ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், காவிரியில் கர்நாடகா ஒரு சொட்டுக்கூட தண்ணீர் தரமாட்டோம் என்று மதசார்பற்ற ஜனதாதளம் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு காங்கிரஸ் சாமரம் வீசி வருவதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here