தமிழக மக்கள் ஏமாளிகள் இல்லை உங்களால் ஏமாற்ற முடியாது! – தி.மு.க.வை சாடும் ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் கீழவாசலில், நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் நடராஜன் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர் காந்தி ஆகிய இருவருக்கும் வாக்குகள் கேட்டு, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரத்தில் ஈடுப்பட்டார். முன்னதாக, அதே பகுதியில் உள்ள ஸ்ரீ அனுக்கிரஹ ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அ.தி.மு.க எம்.பி வைத்திலிங்கம் மற்றும் வேட்பாளர்கள் உடன் இருந்தனர்.

வாசன் பேசியதாவது “தமிழகத்தில் நடைபெறும் 39 நாடாளுமன்றத் தொகுதி மற்றும் 18 சட்டமன்றத்  தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க கூட்டனி வெற்றிபெறும். அ.தி.மு.க கூட்டனிக்கு வாக்களிக்க மக்கள் 100 சதவிகிதம் மனத்தளவில் தயாராகிவிட்டனர்.

விவசாயிகளுக்கு எதிராக நடைபெறும் திட்டங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, ஏழை, எளிய மக்களோடு சாமானியர்கள் போலவே பழகுவபர்கள்தான் முதல்வர் ஈ.பி.எஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவர்களுக்கு, சமானியார்களின் உணர்வுகள் புரியும். அவர்களின் நாடி, நரம்புகளில் நுழைந்து இருக்கிறார்கள். காமராஜரின் பொற்கால ஆட்சிக்குப் பிறகு, தமிழகத்தில் 50 ஆண்டு கால ஆட்சியில், ஏழை எளிய மக்களுக்காக அடித்தளம் அமைத்துக்கொடுத்தது அ.தி.மு.க ஆட்சி. முரண்பாட்டின் மொத்த உருவம் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி. மதவாத மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். தி.மு.க கூட்டணிக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். தமிழக மக்கள் ஏமாளிகள் இல்லை. அவர்களை உங்களால் ஏமாற்ற முடியாது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here