மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் ஜிகேவாசன் வலியுறுத்தல்

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஒரு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர் ஒருவர் பயிற்சி மருத்துவரை தாக்கியதால் அம்மருத்துவர் உயிரிழந்திருக்கிறார். இச்சம்பவத்தால் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். குறிப்பாக மேற்கு வங்க அரசு மருத்துவர்களை அழைத்துப்பேசி சுமூகத் தீர்வு காண வேண்டும். இப்பிரச்சனையில் தவறு செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள், மருத்துவர்கள், தொழில்நுட்பக் கருவிகள் என அனைத்தையும் முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்க மேற்கு வங்க அரசு முன்வர வேண்டும்.

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான சிகிச்சை முறையாக, சரியாக, முழுமையாக நடைபெற வேண்டுமென்றால் அரசு மருத்துவமனைகளை தொடர் கண்காணிப்பு செய்து நோயாளிகளின் சிகிச்சைக்கும், மருத்துவர்களின் பாதுகாப்புக்கும் உறுதி செய்து கொடுக்கக்கூடிய உத்தரவாதத்தை மேற்கு வங்க அரசு கொடுத்து மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதன் மூலம் நாடு முழுவதற்குமான மருத்துவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு தங்களின் மேலான உயிர்காக்கும் பணியை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்வார்கள். அப்போது தான் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு மருத்துவச் சேவை சரியான நேரத்தில் முறையாக சென்றடையும்.எனவே மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிடவும், நோயாளிகளுக்கான உயர்தர சிகிச்சை தொடர்ந்து தடையின்றி கிடைத்திடவும் மத்திய மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #TMC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here