தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தமிழக எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று விளம்பரம் தேடிக்கொள்ளக்கூடாது. அரசியல் ஆக்கக்கூடாது.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தமிழக எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று விளம்பரம் தேடிக்கொள்ளக்கூடாது. அரசியல் ஆக்கக்கூடாது.

தமிழக அரசு மாநிலத்தில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பட்டைப் போக்க எடுத்து வரும் நடவடிக்கையை இன்னும் வேகப்படுத்திட வேண்டும். தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை நிலவி வருகிறது. இப்பிரச்சினையைப் போக்க நீண்ட கால திட்டங்களை வகுத்து செயல்படுத்தி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொடுத்திருக்க வேண்டும். கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இப் பொறுப்பு இருந்திருக்கிறது. இச்சூழலில் இப்போதைய அரசு தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது என்றாலும் கூட இன்னும் அப்பணிகளை வேகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் மேற்கொள்ள வேண்டும். தற்போது ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டிருப்பதும், ஆலோசனை செய்து பிற வழிகளில் தண்ணீர் கொண்டு வர முயற்சிப்பதும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க எதிர்கட்சிகள் நியாயமான முறையில் அரசுக்கு குரல் கொடுக்கலாம். எதிர்கட்சிகள் தண்ணீர் பிரச்சினையை அரசியல் ஆக்காமல் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தால் தமிழக மக்களுக்கு நல்லது. தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக வெற்றி பெற்றிருக்கின்ற எதிர்கட்சிகள் அனைவரும் ஒரு சேர பாராளுமன்றத்தில் தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக குரல் கொடுத்து நிதியை கூடுதலாக ஒதுக்கச் சொல்லி, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடவும் வலியுறுத்தலாம்.

இது தான் இன்றையச் சூழலில் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனைக்கு தமிழக எதிர்கட்சி எம்.பி. க்கள் மேற்கொள்ள வேண்டிய பணியாக இருக்க முடியும். அதனை ஏன் செய்யவில்லை. எனவே நாளை மறுநாள் திங்கள் அன்று மீண்டும் கூட இருக்கின்ற பாராளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசிடம் தமிழக எம்.பி.க்கள் தண்ணீர் தட்டுப்பாட்டிற்காக நிதி ஒதுக்கவும் தண்ணீர் தட்டுப்பட்டை போக்கவும் ஒரு சேர குரல் கொடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here