கோவை தமாகா இயக்க அலுவலகம் மூப்பனார் பவனில் ஆலோசனை கூட்டம்

கோவை, தமாகா இயக்க அலுவலகம் மூப்பனார் பவனில் ஆலோசனை கூட்டம்

கோவை தெற்கு மாவட்ட தலைவர் திரு.V.V.வாசன் அவர்கள் தலைமையிலும், மாநில துணை தலைவர் திரு. குனியமுத்தூர் ஆறுமுகம் அவர்கள் மற்றும் மாநில செயலாளர் ராஜ்குமார், மாநில இளைஞர் அணி துணை தலைவர் திரு.C.B.அருண் பிரகாஷ் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

ஆலோசனை கூட்ட நிகழ்வின் போது மாவட்ட தலைவர் V.V.வாசன் அவர்கள் பத்திரிகை நிருபர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில், ஜூலை 15 ம் தேதி கோவையில் பெருந்தகை காமராஜர் பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்படுவது பற்றியும், 21 ம் தேதி திருப்பூரில் தலைவர் ஐயா G.K.வாசன் அவர்கள் தலைமையில் நடக்கும் பெருந்தகை காமராஜரின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்திற்கு கோவையிலிருந்து கலந்து கொள்வதற்காக கோவை தெற்கு மாவட்ட சார்பாக சுமார் 300 பேர் தமாக தொண்டர்களும், நிர்வாகிகளும் திருப்பூர் செல்கிறார்கள் என்ற விபரங்களையும் அறிவித்தார். அடுத்து, உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக வார்டு வாரியாக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும், உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்துவது சம்பந்தமாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தின் நிறைவில், மக்கள் தலைவர் ஐயா G.K.வாசன் அவர்களின் அன்பு அன்னையார் திருமதி.கஸ்தூரி அம்மாள் மூப்பனார் அவர்கள் மறைவை ஒட்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பொருளாளர் வளர்மதி கணேசன், மாவட்ட துணை தலைவர் அய்யாசாமி, சர்க்கிள் தலைவர் சார்லஸ், மாவட்ட துணை தலைவர் இந்திரா விஜய ராணி, சுரேந்தர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here