
காமராஜர் பிறந்த நாளில் நீர்சேமிப்பு #விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: தமாகாவினருக்கு ஜிகேவாசன் உத்தரவு
#சென்னை: காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ம் தேதி தமிழகம் முழுவதும் தண்ணீர் சேமிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தொண்டர்களுக்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:த.மா.கா.வினர் காமராஜர் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இந்த வருடம் அவரது பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்துவது மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை தூர்வாரவும், பாதுகாக்கவும், நீர் ஆதாரத்தை பெருக்கவும், மழைநீரை சேமிக்கவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்
#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #TMC