குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜிகேவாசன் வலியுறுத்தியுள்ளார்

குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜிகேவாசன் வலியுறுத்தியுள்ளார்.

குடிநீருக்காக திருச்சி-கரூர் மாவட்ட உய்யக்கொண்டான் – கட்டளை உள்ளிட்ட 17 கிளை வாய்க்கால்களில் உடனடியாக தண்ணீர் திறக்கப்பட்டால்தான் பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்கும். மேலும், 11 மாத பாசன உரிமை உடைய 17 கிளை வாய்க்கால்களின் தண்ணீரை நம்பி இருக்கும் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்படும் பயிர்கள், தற்போது போதுமான தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. ஆண்டு பயிர்களான வாழை, கரும்பு, வெற்றிலை, மல்லிகை போன்ற பலவகையின மலர்கள், தென்னை, மா போன்றவற்றிற்கு தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகுமோ என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதனால், ஆண்டு பயிர்களைக் காப்பாற்றவும், குடிநீருக்காகவும் வாய்க்கால்களில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதேபோல, டெல்டா மாவட்டங்களிலும் குடிநீருக்குத் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே மேட்டூர் அணையிலிருந்து 2,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் கூடுதலாக 2,500 கன அடி தண்ணீரை குறைந்தபட்சம் 10 நாள்களுக்குத் திறந்தால், குடிநீருக்குப் பயன்படுவதாக இருக்கும் என்று வாசன் கூறியுள்ளார்.

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics
#Mettur #MetturDam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here