மூப்பனாரின் 18வது நினைவுநாள் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

g k moopanar

18வது நினைவுநாள் மூப்பனார் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி ஜி.கே.மூப்பனாரின் 18-வது நினைவுநாள் அவரது நினைவிடத்தில் காலை முதல் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

ஜி.கே.மூப்பனாரின் 18-வது நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூப்பனாரின் நினைவிடத்தில் காலை முதல் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கரு. நாகராஜன், தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, திருமாவளவன் எம்.பி., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர்.

த.மா.கா. மாநில நிர்வாகிகள் ஞான தேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், என்.டி.எஸ்.சார்லஸ், ஞானசேகரன், தலைமை நிலைய செயலாளர் டி.என்.பிரபாகரன், சேலம் உலகநம்பி, ஆவடி விக்டரி மோகன், முனவர் பாட்சா, மாநில செயலாளர் வேலு, சக்தி வடிவேல், ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.என்.அசோகன், துறைமுகம் செல்வகுமார், மால்மருகன், மாவட்ட தலைவர்கள் பி.எம்.பாலா, அண்ணாநகர் ராம்குமார், சத்யநாராயன், அருண்குமார் மற்றும் செந்தில்குமார், ராஜகோபாலன், முகமது ஜாவித், பூந்தமல்லி ஜெயக்குமார், மயிலை இராம. அருண், மூலக்கடை நித்யானந்தம், மாதவரம் வினோபா, முருகன், வி.எம்.அரவணன், வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ஜவகர் பாபு ஏற்பாட்டில் நலிந்த கட்சி நிர்வாகிகளுக்கு இரு சக்கர வாகனம், சைக்கிள் ஆகியவையும், டிபன் கடை நடத்த ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவியும், 15 பெண்களுக்கு தையல் எந்திரங்கள், 200 பெண்களுக்கு சேலை, ஆண்களுக்கு வேட்டி-சட்டை ஆகியவற்றை ஜி.கே.வாசன் வழங்கினார்.

இதில் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், புனிதன், பத்மநாபன், பாரதிபாபு, அந்தோணி, நெடுமாறன், முத்துராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் ஏற்பாட்டில் ஏழை பெண்களுக்கு தையல் எந்திரங்களை ஜி.கே.வாசன் வழங்கினார். இதேபோல் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பிஜுசாக்கோ ஏற்பாட்டில் ஏழைகளுக்கு தையல் மிஷின், குக்கர், இஸ்திரி பெட்டி, சைக்கிள், சேலைகள் வழங்கப்பட்டது. மகளிரணி தலைவி ராணிகிருஷ்ணன் ஏற்பாட்டில் பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #TMC #moopanar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here