5, 8-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்ற முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்

‘தம்பி, வண்டியை எடுங்க போலாம்’ – ஏரிக்குள் டூவிலரில் சென்று ஆய்வு செய்து அசத்திய ஜி.கே.வாசன்
‘தம்பி, வண்டியை எடுங்க போலாம்’ – ஏரிக்குள் டூவிலரில் சென்று ஆய்வு செய்து அசத்திய ஜி.கே.வாசன்

5, 8-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்ற முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.

தூத்துக்குடியில் அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி – அனைத்து மொழிகளையும் ஒரேநிலையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஹிந்தியை கட்டாயமாக்குவது என்பது மக்களின் விருப்பமாக ஒருபோதும் இருக்காது. மூன்றாவது மொழியாக, விருப்பமிருந்தால் ஹிந்தியை படிக்கலாம் என்பதே தமாகா நிலைப்பாடு. தமிழகத்தில் டிஜிட்டல் பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு மறுவாழ்வு தேவை என்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அத்தொழிலை முறைப்படுத்த வேண்டும். தமாகா தனித்தன்மையோடு சிறப்பாக செயல்படுகிறது. கட்சியின் பலம் உயர்ந்துகொண்டே செல்கிறது. தேர்தலுக்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல தமாகா. உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம். பேரவையில் எங்களது குரல் ஒலிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.

தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்ற முடிவு, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சுமையாக இல்லாத வகையில், அரசு மறுபரிசீலனை செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டில் பொருளாதார தேக்க நிலை உள்ளது. தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருந்து மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “சட்டம் அனைவருக்கும் சமமானது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஏற்றவாறு இயங்கும் இந்த வழக்கில் உச்சநீதிமன்றமே இறுதி முடிவை எடுக்கும். தமிழகத்திலிருந்து அண்மையில் தேர்வான மக்களவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை’ என்றார் அவர்
#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #TMC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here