`வீட்டுக்கு வரமாட்டீங்களா?’ – ஜி.கே.வாசனை ஆச்சர்யப்படுத்திய மோடி!

`வீட்டுக்கு வரமாட்டீங்களா?’ – ஜி.கே.வாசனை ஆச்சர்யப்படுத்திய மோடி!

ஜி.கே.வாசன் அணிவித்த சால்வையைக் கழற்றவந்த மோடி, என்ன நினைத்தாரோ? அதைக் கழற்றாமல் கழுத்திலேயே அணிந்துகொண்டு நடந்தார்.

இந்திய – சீன நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, தனி விமானத்தில் இன்று காலை 11 மணிக்குச் சென்னை வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மொத்த அமைச்சரவையும் வரவேற்றது. கூட்டணிக் கட்சிகளான தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், பா.ம.க., புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளும் பிரதமரை வரவேற்றன.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனைக் கண்டவுடன் குஷியான பிரதமர், “ஹலோ… மிஸ்டர் வாசன். என்ன டெல்லி பக்கமே வர மாட்டேங்கறீங்க? நான் கூப்பிட்டாத்தான் வீட்டுக்கு வந்து பார்ப்பீங்களா?” என்று கேட்க, வெட்கத்தில் முகம்சிவந்த ஜி.கே.வாசன், “வர்றேன் ஜி. கண்டிப்பா வீட்டுக்கு வந்து பார்க்குறேன்” என்று உறுதியளித்தார். “சும்மா சொல்லிட்டு அப்படியே போய்விடக் கூடாது. உங்க வரவைக் கண்டிப்பா எதிர்பார்ப்பேன்” என பிரதமர் கலகலக்க, அந்த இடமெல்லாம் சிரிப்பொலி பூத்தது.

From vikatan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here