காவி மயம் என்பது குறித்து ரஜினிகாந்த் கூறியது அவரது சொந்த கருத்து

காவி மயம் என்பது குறித்து ரஜினிகாந்த் கூறியது அவரது சொந்த கருத்து.

அவர் பொது வாழ்வில் வரவில்லை, தனிக்கட்சி துவங்கவில்லை, அவரது தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து பேசுவதற்கு ஏதுமில்லை.

அண்மையில் #பிரதமரை #சந்தித்தபோது #தமிழகத்தின் #நலனுக்கான_திட்டங்கள்,
#முக்கிய_பிரச்னைகளில் தமிழகத்துக்கான சிக்கல்களை தெரிவித்தேன்.

#காங்கிரஸ் #தலைவர்களுக்கு வழங்கப்பட்ட #எஸ்_பி_ஜி, #கமாண்டோ #பாதுகாப்பு திரும்பபெறப்பட்டாலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசே தெளிவான விளக்கம் அளித்துள்ளதால் விமர்சிக்க ஏதுமில்லை.

#உள்ளாட்சி_தேர்தல் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் போனதற்கு #திமுக தான் காரணம். இந்த தேர்தலை நடத்த அதிமுக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா சந்திக்கிறது.

தமாகா சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை துவக்கிவிட்டோம். கடந்த ஒரு மாதமாக அந்தந்த பகுதியில் நிர்வாகிகள் மூலம் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களின் விவரங்களை சேகரித்துள்ளோம்.

வரும் 22, 23, 25 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக இதற்கான ஆய்வுக்கூட்டம் நடக்கிறது.

வரும் 22 ஆம் தேதி திருச்சியில் 25 மாவட்டங்களுக்கும், 23 மற்றும் 25 ஆம் தேதி சென்னையில் மீதமுள்ள மாவட்டங்களுக்குமான நிர்வாகிகளை சந்தித்து போட்டியிடுவது தொடர்பாக விவாதிக்க உள்ளோம்.

#ஜி_கே_வாசன்

தலைவர்

#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here