பாபா குருநானக் தேவ்ஜியின் 550 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவது பெருமைக்குரியது.

சீக்கிய மதத்தை நிறுவிய பாபா குருநானக்தேவ்ஜியின் 550 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவது பெருமைக்குரியது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் கர்தார்பூரில் சீக்கியர்களின் முதன்மை குருவான குருநானக்கின் சமாதி அமைந்துள்ளது. புனிதநூல், வழிபாட்டு முறை, சமயச் சடங்குகள், நம்பிக்கைகர், அடையாளங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சீக்கிய மதம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

குருநானக்கின் புகழை நிலைநாட்ட வேண்டிய செயல்பாடுகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதாவது பஞ்சாப் மாநிலத்திலிருந்து சர்வதேச எல்லை வரை மத்திய அரசு சிறப்பு பாதை அமைத்துள்ளது. மேலும் பாகிஸ்தான் எல்லையில் இருந்து கர்தார்பூர் சாஹிப் வரை பாகிஸ்தான் அரசு சிறப்பு பாதை அமைத்துள்ளது.

இந்தியாவின் குர்தாஸ்பூர் நகரில் அமைந்துள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து கர்தார்பூர் வரை அமைக்கப்பட்ட இந்த பாதையின் முதல் பயணத்தைப் பிரதமர் மோடி அவர்கள் நேற்று முன் தினம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள். இதன் மூலம் சீக்கியர்கள் புனிதப் பயணமாக குருநானக்கின் சமாதிக்குச் சென்று வர வழி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சீக்கியர்கள் கர்தார்பூர் யாத்திரை செல்வதற்கும், இந்தியா பாகிஸ்தான் உறவு மேம்படுவதற்கும் இந்த பாதைகள் வழிவகுத்து கொடுக்க குருநானக்கின் போதனைகள் பேருதவியாக இருக்கும். எனவே குருநானக்கின் போதனைகளை கடைபிடிப்போம் அவர் காட்டிய வழியில் நடப்போம் அதுவே குருநானக்கின் 550 வது பிறந்த நாள் செய்தியாகும். மேலும் குருநானக்கின் 550 வது பிறந்த நாளை கொண்டாடும் இத்தருணத்தில் சீக்கியர்கள் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரும் முன்னேற்றம் அடைந்து நாடும் வளம் பெற்று நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை
மேலோங்க வேண்டும் என்பது தான் த.மா.கா வின் எதிர்பார்ப்பாகும்.

#ஜி_கே_வாசன்

தலைவர்

#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

#550th_Birth_Anniversary
#ShriGuruNanakDevji

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here