இலங்கையில் தேசியகீதம் தமிழில் தொடர மத்தியஅரசு வலியுறுத்த வேண்டும் ஜிகேவாசன் வேண்டுகோள்

இலங்கையின் சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் ஏற்கனவே தமிழ் மொழியிலும் இசைக்கப்பட்டு வந்ததுபோல தொடர்ந்து தமிழ் மொழியில் இசைக்க மத்திய அரசு இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையின் 2020ம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என்று இலங்கை அரசு தீர்மானித்திருப்பது ஏற்புடையதல்ல. இதுவரையில் தேசிய கீதம் தமிழ் மொழியிலும், சிங்கள மொழியிலும் பாடப்பட்டு வந்த நிலையில் திடீரென்று சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும் என இலங்கை அரசு அறிவித்திருப்பது தமிழர்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் அமைந்து விடும்.
இலங்கையை சிங்கள மக்களுக்கு மட்டுமல்லாமல் அங்குள்ள தமிழ் மக்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுவான நாடாக எண்ணி ஏற்கனவே நடைமுறையில் பின்பற்றியபடி தேசிய கீதத்தை தமிழ் மொழியிலும் பாட வைக்க வேண்டியது இலங்கை அரசின் கடமை. அதே போல சிங்கள மக்களுக்கு உள்ள அதிகாரம், உரிமைகள், பாதுகாப்பு, சலுகைகள் போன்றவை அனைத்து தரப்பினருக்கும் பாகுபாடில்லாமல் கிடைக்க வேண்டும். எனவே இந்திய அரசு இலங்கை அரசை தொடர்புகொண்டு இலங்கையில் தேசிய கீதமானது தமிழ் மொழியிலும் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்பட தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜி.கே.வாசன் அறிக்கையில் கூறியுள்ளார்.

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #TMC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here