உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ஜி கே வாசன்

உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

உலக மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது.

பெண்கள் நாட்டின் கண்கள் என்பார்கள்.
மன உறுதி கொண்டவர்கள் பெண்கள்.
நம் நாட்டில் குடியரசுத் தலைவராக, பிரதம மந்திரியாக, மாநில முதலமைச்சராக, பாராளுமன்ற சபாநாயகராக, பல்வேறு விளையாட்டில் பல்வேறு பதக்கங்களை, விருதுகளை பெற்றவர்களாக பெண்கள் சாதனை படைத்திருப்பது பெண் இனத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்திருக்கிறது.

ஒரு குடும்பம் முன்னேறி, மாநிலமும் முன்னேறி, நாடும் முன்னேற்றம் அடைவதற்கு பெண் இனம் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு செயல்படுவது சாலச்சிறந்தது.

குறிப்பாக பெண்கள் கல்வி, சமூகம், அரசியல், இசை, பொருளியல் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

பெண்கள் தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் எதிர்கொண்டு வீட்டிற்காக, நாட்டிற்காக வாழ்வது பாராட்டுக்குரியது. பெண்களுக்கு உரிய உரிமைகள் முழுமையாக கிடைக்க வேண்டும்.

பெண் குழந்தைகள் முதல் முதியவர் வரை உள்ள பெண் இனமானது பாதுகாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பதை மனதில் வைத்து ஒவ்வொரு ஆணும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரணாக விளங்க வேண்டும்.

பெண்ணுக்கு பாலியல் சம்பந்தமாக மட்டுமல்ல வேறு ஏதேனும் தொல்லைகள் இருப்பின் அதனை தடுத்து நிறுத்தவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடராமல் இருக்கவும் ஆளுகின்ற ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பினரும் பெண்களின் பாதுகாப்புக்கு அதிக அக்கறையோடு செயல்பட வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக, பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் இன்றைய அ.தி.மு.க அரசால் தொடர்வதும், இன்றைய அ.தி.மு.க அரசு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதியை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவித்ததும், பட்ஜெட்டில் மகளிர் நலத் திட்டங்களுக்காக மொத்தம் 78 ஆயிரத்து 796.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததும் பெரிதும் பாரட்டப்பட வேண்டியது.

மத்திய மாநில அரசுகள் – சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் பெண்களின் முன்னேற்றத்துக்கும், பாதுகாப்புக்கும் இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்களை கொண்டுவந்து அவர்களின் நிம்மதியான, பாதுகாப்பான வாழ்வுக்கு வழி வகுத்து தர வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு த.மா.கா சார்பில் மகளிருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு த.மா.கா – மகளிரின் முன்னேற்றத்துக்கும், பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

#ஜி_கே_வாசன்

தலைவர்

#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here