
மக்கள் தலைவர் ஐயா ஜி.கே.மூப்பனார் அவர்களுக்கு தஞ்சாவூரில் நினைவு மணிமண்டபம். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமியிடம். தமாகா மாவட்ட தலைவர் குடவாசல் திரு.எஸ்.தினகரன் கோரிக்கை
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூர் வன்மீகபுரத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் நேற்று அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்த திருவாரூர் தமாகா மாவட்ட தலைவர் குடவாசல் திரு.எஸ்.தினகரன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், தமிழக அரசியிலிலும், இந்திய அரசியலிலும் ஒப்பற்ற தலைவராகவும் மக்கள் தலைவராகவும் விளங்கியவர் ஐயா ஜி.கே.மூப்பனார் அவர்கள். தமிழக சட்டமன்றத்திலும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பல்வேறு நிலைகளில் மக்கள் பணியாற்றிவர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் நாட்டிற்காக பல திட்டங்களை நிறைவேற்றி மக்களின் தலைவராக விளங்கியவர். மேலும் மக்கள் தலைவர் ஐயா ஜி.கே.மூப்பனாருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரின் நினைவாக அவர் பிறந்த மாவட்ட தலைநகாான தஞ்சாவூரில் மணி மண்டபம் அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தலைமையகமாக விளங்கும் சென்னை முழுவுருவச் சிலை ஒன்றையும் நிறுவ மாண்புமிக தமிழக அவர்கள் நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திருவாரூர் மாவட்ட தமாகா