அ.இ.அ.தி.மு.க – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வாய்ப்பை வழங்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

அ.இ.அ.தி.மு.க – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வாய்ப்பை வழங்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

அ.இ.அ.தி.மு.க – மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுப்பதில் கூட்டணி கட்சியான த.மா.கா வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினரை ஒதுக்கியிருப்பதற்காக அ.இ.அ.தி.மு.க வுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு தமிழக முதல்வரும் அ.இ.அ.தி.மு.க வின் இணை ஒருங்கிணைப்பாளருமான திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்களும், மாண்புமிகு துணை முதல்வரும் அ.இ.அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், அ.இ.அ.தி.மு.க வின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களும் சேர்ந்து எடுத்த முடிவின் படி என்னை மாநிலங்களவை உறுப்பினராக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாநிலங்களவை தேர்தலில் த.மா.கா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நான் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் உறுதுணையாக செயல்படுவேன். மேலும் த.மா.கா சார்பில் என்னை மாநிலங்களவையில் உறுப்பினராக பொறுப்பு வகிக்க, மக்கள் பணியாற்ற அளிக்கப்பட்டுள்ள இந்த நல்ல வாய்ப்பை த.மா.கா முழுமையாகப் பயன்படுத்தும்.

எனவே த.மா.கா வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான வாய்ப்பை அளித்திருக்கும் அ.இ.அ.தி.மு.க வுக்கு த.மா.கா சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

#ஜி_கே_வாசன்

தலைவர்

#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

அரியலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ்

அதிமுக கூட்டணியில் மக்கள் தளபதி ஐயா ஜிகே வாசன் அவர்களை மேல்சபை எம்பி வேட்பாளராக அறிவித்ததை முன்னிட்டு அரியலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடிய நிகழ்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here