தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், வீடியோ கான்பரன்சிங்ல் கலந்தாய்வு கூட்டம், சோழமண்டல தளபதி ஐயா S. சுரேஷ் மூப்பனார் அவர்களின் அறிவுரையின்படி

thanjai-tmc
thanjai-tmc

தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், வீடியோ கான்பரன்சிங்ல் கலந்தாய்வு கூட்டம், சோழமண்டல தளபதி ஐயா S. சுரேஷ் மூப்பனார் அவர்களின் அறிவுரையின்படி, மாவட்ட தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் N.R. ரெங்கராஜன் Ex MLA அவர்களுடைய ஆலோசனைப்படி நடைபெற்றது.

இதில் மாவட்ட, மாநகர, வட்டார இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஊரடங்கு நிலை மற்றும் தளர்வு செய்யப்பட்ட பிறகும் பகுதி மக்களின் நிலையினை எடுத்துரைத்தார்கள்.

இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. இவ்வாண்டு சரியான நேரத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் துயர் போக்கும் வகையில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேசமயம் கடைமடை பகுதிகளுக்கும் ஆற்றுப் பாசன நீர் சென்று சேரும் வரை நடுத்தர பகுதியிலே இருப்பவர்கள் குழாய்கள் மூலம் தண்ணீர் எடுப்பதை தாமதப்படுத்தி கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டு உபயோகப்படுத்தினால் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் கடைமடை பகுதி விவசாயிகள் பயன்பெறுவர் என்பதால் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

2. டெல்டா மக்களின் குறுவை சாகுபடி வளம்பெற போதுமான விதைநெல் மற்றும் உரத்தட்டுப்பாடு இன்றி கிடைத்திட அரசு வழிவகை செய்யவேண்டும்.

3. தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக திருவாரூா் – காரைக்குடி இடையே செல்லும் ரயில் பாதை கடந்த 2019 -ஆம் ஆண்டு மாா்ச் இறுதியில் முழுவதும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து ஜூன் மாதம் முதல் இத்தடத்தில் டெமு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இப்பாதையிலுள்ள ரயில்வே கேட்களை மூடி திறக்க ஆள்களை நியமிக்காததால் ரயிலிலேயே பயணிக்கும் நடமாடும் கேட் கீப்பா்கள் மூலம் அவை இயக்கப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டில், பல முறை இந்த ரயில் ரத்து செய்யப்பட்டும், கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டும் இயங்கி வந்தது. இந்நிலையில் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மாா்ச் 25-ஆம் தேதி முதல் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்ட டெமு பாசஞ்சா் ரயில், கேட் கீப்பா் பிரச்னையால் அதிகமான பயண நேரத்துடன் கால அட்டவணையில் இயக்கப்பட்டதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. இதைக் கருத்தில் கொண்டு அந்த ரயில் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் ரயில் பயணிகளிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக இயக்கப்படும் டெமு பயணிகள் ரயிலை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யாமல், கரோனா இடா்பாடுகள் முடிவுற்று இயல்வு நிலை திரும்புவதற்குள் அந்த வழித்தடத்தில் போதிய கேட் கீப்பா்களை நியமித்து, அந்த ரயிலின் வேகத்தை அதிகரித்து தொடா்ந்து இயக்கவும், அந்தத் தடத்தில் பல புதிய ரயில்களை அறிமுகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. தஞ்சை மாவட்டத்தில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையிலே மக்களை காக்கும் வகையில் கபசுரக் குடிநீர், மளிகை பொருட்கள் காய்கறிகள், மாஸ்க் மற்றும் மருந்துகள் வழங்கி சிறந்த பணியை மேற்கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here