மாநிலங்கள் அவையில் தமிழக மக்களின் குரலாக ஒலிப்பேன்

மாநிலங்கள் அவையில் தமிழக மக்களின் குரலாக ஒலிப்பேன்

பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் அவர்களின் ஆசியோடு பாராளுமன்ற
மாநிலங்கள் அவை உறுப்பினராக இன்று நான் பொறுப்பு ஏற்றிருக்கிறேன். மாநிலங்கள் அவை உறுப்பினராவதற்கு, த.மா.கா.வுக்கு வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுக்கும் அ.இ.அ.தி.மு.விற்கும் இயக்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பா.ஜ.கா வின் தேசிய தலைமைக்கும், பா.ம.க. தே.மு.தி.க, மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்திய அரசு, தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்தும், பலப்படுத்தியும், பொருளாதார முன்னேற்றத்தை விரைவுப்படுத்தியும், ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சிக்கு, தொடர்ந்து செயலாற்றி வருகிறது. தமிழக அரசு, தமிழகத்தின் வளர்ச்சியிலும், மக்கள் நலனிலும், அக்கரை கொண்ட அரசாக, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்தகைய நல்ல சூழலில், தமிழகத்தின் வளர்ச்சிக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்களை, விரைவாகவும், முழுமையாகவும், செயல்படுத்துவதற்கு நான் உறுதுணையாக இருப்பேன், மாநிலங்கள் அவையில் தமிழக மக்களின் குரலாக ஒலிப்பேன். மத்தியில் நிலுவையில் உள்ள தமிழக நலன் சார்ந்த, அனைத்து துறை சார்ந்த திட்டங்களை, விரைவில் செயல்படுத்த, இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன், விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் அமைப்புக்கள் மகளிர், மாணவர் மற்றும் SC/ST, பிரிவினர், சிறுபான்மையினர் மற்றும் பிற நலிந்த பிரிவினரின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும், தொடர்ந்து பாடுபடுவேன், மக்கள் பணியிலும், இயக்கப் பணியிலும், இடைவிடாது என்னோடு பயணிக்கும் த.மா.கா- வின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேசநலன், தமிழக மக்கள் நலன் சார்ந்த என் பணிக்கு தமிழக மக்களின் ஆதரவு வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஜி கே வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here