கேரளா மாநிலத்தில் மண்சரிவால் உயிரிழந்த, தமிழகத்தைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசன் இரங்கல்.

கேரளா மாநிலத்தில் மண்சரிவால் உயிரிழந்த, தமிழகத்தைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசன் இரங்கல்.

கேரளா மாநிலம் மூணாறு அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் தமிழகத்தைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 50-பேருக்கு மேல் மண்ணில் புதைந்தனர் என்ற செய்தி, மிகவும் அதர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே, ராஜமலை பெட்டிமுடி பகுதியில் கண்ணன் தேவன் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் நில சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதில் தோட்டத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தொகுப்பு வீடுகள் நிலச்சரிவால் மூடப்பட்டு இருக்கிறது. இதில் சுமார் 50 பேருக்கு மேல் தங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நிலச் சரிவில் சிக்கியவர்களை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் 12 பேர் காயங்களுடனும், 17-பேர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு உயர் ரீகிச்சையும், ஆறுதல் நிதியும், அளிக்க கேரளா மற்றும் தமிழக அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here