குறுவை அறுவடை முடியும் வரை அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும். ஐயா ஜி.கே.வாசன் வேண்டுகோள்

குறுவை அறுவடை முடியும் வரை அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும். ஐயா ஜி.கே.வாசன் வேண்டுகோள்
__________________________

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசன் எம்பி அவர்கள் இன்று (23.09.2020) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கி நடந்துகொண்டு இருக்கிறது .

தமிழக அரசு கொள்முதல் மையங்கள் மூலம் அனைத்து இடங்களிலும் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் .

மழை காரணமாக ஈரப்பதம் உள்ள நெல்லை , அதிகாரிகள் திருப்பி அனுப்பாமல் அனைத்து இடங்களிலும் கொள்முதல் செய்ய வேண்டும் .

இம் மாதம் ( செப்டம்பர் ) இறுதிக்குள் குறுவை நெல் கொள்முதல் செய்வதை அரசு முடித்துக் கொள்ள இருப்பதாக வந்த தகவலால் , விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர் .

அரசு கொள்முதல் செய்வதை நிறுத்திக் கொண்டால் விவசாயிகள் தனியார் வியாாபரிகளிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்படும் .

இதனால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படும் .

ஆகவே விவசாயிகளின் நலன் கருதி குறுவை அறுவடை முழுமையாக முடியும் வரை அரசே தொடர்ந்து கொள்முதல் செய்ய வேண்டும் .

டெல்டா மாவட்டங்களில் உள்ள சிறு , குறு விவசாயிகள் குறுவை நெல்லை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்து வைத்துக்கொள்ள தேவையான வசதிகள் இல்லாததால் உடனடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் .

மேலும் அதிகமான கொள்முதல் மையங்கள் திறந்து அரசு ஆவண செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here